விழுப்புரத்தில் பசுமாட்டை கன்றுடன் காப்பாற்றிய ஜூனியர் ரெட் கிராஸ்

விழுப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 2 நாட்களாக அவதிப்பட்டு வந்த கன்று போட்ட பசு மாட்டை காப்பாற்றினர்.;

Update: 2022-08-26 14:15 GMT

விழுப்புரத்தில் பசுமாட்டை கன்றுடன் காப்பாற்றிய ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பினர்

அன்னை தெரசா பிறந்தநாளில் ஜே.ஆர்.சி அமைப்பினரின் மனித நேயப்பணிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

விழுப்புரம், காமராஜர் நகராட்சி மேனிலைப்பள்ளி வளாகத்தில் பசுமாடு ஒன்று கன்று போட்டு 2 நாட்களாக உரிமையாளர் யாரும் வராமல், கவனிப்பார் இல்லாமல் இருந்ததை அறிந்து ஜே.ஆர்.சி அமைப்பினர் அதனை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், காமராஜர் நகராட்சி மேனிலைப்பள்ளி வளாகத்தில் பசுமாடு ஒன்று கன்று போட்டு 2 நாட்களாக கவனிப்பார் இன்றி அவதிப்பட்டு வந்தது.  இந்நிலையில் அதனை அப்பள்ளியின் ஜே.ஆர்.சி ஆலோசகர் பி.அய்யனார் என்பவர் மாவட்ட கன்வீனர் முனைவர் ம. பாபுசெல்வதுரைக்கு இன்று காலை 11.00 மணியளவில் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக மாவட்ட கன்வீனர் விழுப்புரம், கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார், இதனையடுத்து 11.35 மணிக்குள் விழுப்புரம் மருதூர் கால்நடை மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் பள்ளிக்கு வர ஏற்பாடு செய்தார். அதன்படி பள்ளிக்கு வந்திருந்த கால்நடை மருத்துவக் குழுவினர் உதவி தலைமையாசிரியர் என்.பன்னீர்செல்வம் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் இருந்த பசு மற்றும் கன்றிற்கு தேவையான சிகிச்சை அளித்து காப்பாற்றினர். அதோடு கால்நடை துறை மூலம் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து அழைத்து போக அறிவுறுத்தப்பட்டது.

மேலும் கால்நடைத்துறை மருத்துவ குழுவினர் பசு மற்றும் கன்றிற்கு தேவையான ஊட்டசத்து பொருட்களை பசு மாட்டு உரிமையாளரிடம் வழங்கினர்.அன்னை தெரேசா பிறந்தநாளில் இந்த மனித நேயச் சேவை செய்ய எங்களுக்கும் இது வாய்ப்பாக அமைந்தது என மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பினர் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.இத்தகைய மனித நேய செயல் மாவட்ட மக்களிடம் வெகுவாக பாராட்டை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News