விழுப்புரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பினர் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டத்தில் ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பினர் கொரோனா குறித்த ஆலோசனை வழங்கும் பணியை தொடங்கி உள்ளனர்

Update: 2021-05-31 13:04 GMT

விழுப்புரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பினர் ஆலோசனை வழங்கினர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாடு மற்றும் உதவி மையத்தில் மாவட்ட பள்ளி கல்வி துறையின் கீழ் இயங்கும் இளைஞர் அமைப்பான ஜூனியர் ரெட்கிராஸ் (JRC) மாவட்ட கன்வீனர் மா.பாபுசெல்லதுரை தலைமையில் 11 ஆசிரியர்கள் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கும் பணியை திங்கட்கிழமை தொடங்கினர்.

இதற்காக இவர்களுக்கு மாவட்ட பயிற்சி ஆட்சியர் ரூபினா தலைமையில் கொரோனா குறித்த முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு வழங்கும் பணியை செய்தனர். முன்னதாக நுழைவு வாயில் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கினர், அதனை தொடர்ந்து வெப்ப பரிசோதனை செய்தனர்.

Tags:    

Similar News