அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

அகவிலைப்படி உயர்வுக்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜாஸ்மின் அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்தனர்.;

Update: 2022-01-02 16:15 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின் 

முதல்வருக்கு அமைச்சுப் பணியாளர் செயல்திறன் கூட்டு இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் கவிஞர் மா.ரா. சிங்காரம் நன்றியினை தெரிவித்து உள்ளார்,

அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள  அரசு, பல்வேறு நிதி நெருக்கடியிலும் அரசுப் பணியாளர்களுக்கு 1.1.2022 முதல் 14 சதவீதம் அகவிலைப்படியினையும் , பொங்கல் போனஸ் ரூ.3000 மும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்று பவர்களுக்கு ரூ.1000 மும் ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு ரூ.500ம்,வழங்கி உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். என கூறியுள்ளார் 

Tags:    

Similar News