இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணியில் சேருவதற்கு அழைப்பு
இந்திய விமானப்படையில் ஒய் ஆண் மருத்துவர் உதவியாளர் பணிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை குழு 'Y' ஆண் மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர்வதற்கு விண்ணப்பித்திடலாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் இந்திய குடிமக்களை விமானப்படை குழு 'Y'. மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர்ப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இதற்கான ஆட்சேர்ப்பு தேர்வு சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் வரும் பிப்ரவரி மாதம் 1 முதல் 8 வரையிலான வெவ்வேறு தேதிகளில் நடைபெற உள்ளது.
மருத்துவ உதவியாளர்(12ஆம் வகுப்பு மட்டும்) பணிக்கு திருமணம் ஆகாதவராகவும், அங்கீகரிக்ப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும், 27/06/2002 முதல் 27/06/2006 வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.
இப்பணிக்கு தமிழ்நாடு கேரளா மற்றும் மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசங்களைச்சேர்ந்த இளைஞர்களுக்கு உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு (2நிலைகள்) மற்றும் மருத்துவ தேர்வு ஆகிய தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.
மருத்துவ உதவியாளர் 12ஆம் வகுப்பு (டிப்ளமோ/பி.எஸ்.சி. மருத்துவம்) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து 12th, Diploma/B.Sc(Pharmacy) படித்து முடித்த திருமணம் ஆகாதவர்கள் 27/06/1999 முதல் 27/06/2004 வரையான காலத்தில் பிறந்தவராகவும், திருமணமான விண்ணப்பதாரர்கள் 27/06/1999 முதல் 27/06/2002 வரையான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.14,600/- வழங்கப்படும். பயிற்சியின் முடிவில், இராணுவ சேவை ஊதியம்(MSP) உட்பட குறைந்தபட்ச மொத்த ஊதியம் ரூ.26,900/- ஆகும். இப்பணிக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் சேர்ந்த இளைஞர்களுக்கு உடல் தகுதித்தேர்வு, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த எழுத்துத்தேர்வு (2நிலைகள்) மற்றும் மருத்துவ தேர்வு ஆகிய தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.உயரம் 152.5 செ.மீட்டர். இருக்க வேண்டும்.
https://airmenselection.cdac.in/CASB/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தை ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பை பார்த்து, தேர்வுமுறை தேர்வு நாளன்று எடுத்து செல்லவேண்டிய ஆவணங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிந்து தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் தகவலுக்கு மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரிலோ அல்லது 04146226417 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு இளைஞர்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.