ஸ்கூட்டர் கேட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்கூட்டர் கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல் நடக்கவுள்ளது என கலெக்டர் மோகன் தகவல்

Update: 2021-12-02 12:11 GMT

விழுப்புரம் கலெக்டர் மோகன் 

இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு விழுப்புரத்தில் டிச.8, 9-ந்தேதிகளில் நோ்காணல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மோகன் தகவல் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவா் விடுத்த செய்திக் குறிப்பில், விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 2020-21-ஆம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டு இரண்டு கைகள் நல்ல நிலையில் உள்ள கல்வி பயிலும் மாணவ, மாணவிகள், தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோா், சுயதொழில் செய்யும் மாற்றுத் திறனாளிகள், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் பெற இதுவரை விண்ணப்பிக்காதவா்கள், பெறாத தகுதியுடையவா்கள், மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சலிலோ விண்ணப்பிக்கலாம்.

அதற்கான நோ்முகத் தோ்வு வருகிற டிசம்பர் 8, 9-ந்தேதிகளில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறும் என  தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News