விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 33 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 46,229 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவரும் இறப்பு இல்லை, இதுவரை 358 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், இன்று மட்டும் 3 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 45,750 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 121 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.