110 விதி அறிவிப்புகளை அரசு முறையாக செயல்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழக அரசு 110 விதியின் கீழ் அறிவிக்கும் திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டார்
விழுப்புரத்திற்கு உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் ஆளும் திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த பெண்களுக்கு ரூ.ஆயிரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை குறித்த காலத்தில் நிறைவேற்ற வேண்டும், 110 ன் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகளை முறையாக நிறைவேற்ற வேண்டும், மழை காலம் நெருங்கி வருவதால் நீர் நிலைகளை, கண்காணித்து பாதுகாக்க வேண்டும் என கூறினார்.
மேலும், உள்ளாட்சி தேர்தல் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து உறுதியாக நடத்தவேண்டும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கவோ, மாற்றவோ கூடாதுஎன்று கூறினார். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு தற்காலிகமானதுதான். மத்திய அரசு விலையை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். .உ.சிக்கு அரசு செய்யும் மரியாதையை தமாகா வரவேற்கிறது எனவும் தெரிவித்தார்,
பேட்டியின்போது மாவட்ட தலைவர் தசரதன் உட்பட பலர் உடனிருந்தனா்.