விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு: ஆட்சியர் மோகன் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைமுறையிலுள்ள முழு ஊரடங்கை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.

Update: 2022-01-09 09:29 GMT

வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளிடம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ந.ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு இன்று நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டத்திலும் ஊரடங்கால் பொதுப்பக்குவரத்து தடை உள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் நகராட்சி, நான்குமுனை சந்திப்பில், அத்தியாவசிய தேவை பணிகளுக்கு மட்டும் தான் செல்கின்றார்களா என்பது குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் கி.அரிதாஸ், துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.ரூபினா, நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா ஆகியோர் உட்பட பலர் உடன் உள்ளனர்.

Tags:    

Similar News