இலவசமாக மனு எழுதித்தரும் சேவை: மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்ட பணியாளர்கள் சார்பில் இலவசமாக எழுதித்தரும் சேவை தொடக்கம்

Update: 2021-11-15 12:25 GMT

மாவட்ட மகளிர் திட்ட பணியாளார்கள் சார்பில் கட்டணம் இல்லாமல் இலவசமாக மனு எழுதி கொடுக்கும் சேவை தொடங்கப்பட்டது


விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது, இதில் கலந்து கொண்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க மக்கள் வருகின்றனர்,

இவர்களில் பெரும்பாலானோர் வயது முதிர்ந்த, எழுத படிக்கதெரியாத ஏழை எளிய மக்கள். இவர்களிடம் மனு எழுதி தருகிறோம் என்று பலர் பணத்தை அதிகளவில் வாங்குவது, மேலும் மனு மீது நடவடிக்கை எடுக்க சொல்லுகிறேன் என கூறி ஏமாற்றுவது என பலர் பாதிக்கப்பட்டு வந்தனர்,

இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவுறுத்தல்படி, மாவட்ட மகளிர் திட்ட பணியாளார்கள் சார்பில் திங்கட்கிழமை தோறும் கட்டணம் இல்லாமல் இலவசமாக மனு எழுதி கொடுக்கும் சேவை  மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே தொடங்கப்பட்டது, இன்று அங்கு ஆர்வமுடன் பலர் இலவசமாக மனு எழுதி கொண்டு மாவட்ட ஆட்சியர் மோகனை வாழ்த்தி சென்றனர்

Tags:    

Similar News