விழுப்புரம் நகராட்சியில் வாக்கு இயந்திரம் அனுப்பும் பணி
விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளுக்கும் நடக்க உள்ள தேர்தலுக்கு, வாக்கு இயந்திரம் அனுப்பும் பணி நடைபெற்றது;
விழுப்புரம் நகராட்சியில் வாக்கு இயந்திரம் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் வாக்கு மையத்திற்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை விழுப்புரம், திண்டிவனம், கோட்டகுப்பம் உள்ளிட்ட 3 நகராட்சிகள் விக்கிரவாண்டி, வளவனூர்,அரகண்டநல்லூர் திருவெண்ணைநல்லூர், மரக்காணம், செஞ்சி, அனந்தபுரம் உள்ளிட்ட 7 பேரூராட்சிகளில் நாளை நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ள நிலையில், விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகளில் உள்ள தேர்தல் மையங்களுக்கு, வாக்கு இயந்திரம் உள்ளிட்ட தளவாட பொருட்கள் அனுப்பு பணி விழுப்புரம் நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.