முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு : விழுப்புரத்தில் கண்டுகளித்த மக்கள்
சென்னையில் திறக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா காட்சியை காணொளி மூலம் மக்கள் கண்டு களித்தனர்;
கருணாநிதி சிலை திறப்பு விழா காணொளி மூலம் விழுப்புரத்தில் பொது மக்கள் கண்டுகளித்தனர்
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் சென்னை, ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதி முழு திருவுருவ சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்திய குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்தார், அந்நிகழ்ச்சியினை பொது மக்களின் பார்வைக்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர்.