விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைது

விழுப்புரத்தில் ஜெ.பல்கலைகழகத்தை ரத்து செய்ததை எதிர்த்து தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-08-31 07:26 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிமுகவினர். 



விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் இன்று திடீரென பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை அருகே  தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஜெ.பல்கலைகழகத்தை திமுக அரசு ரத்து செய்து அதனை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்.

உடனடியாக அவரை போலீசார் கைது செய்து பாலாஜி திருமண மண்டபத்தில் அடைத்தனர்.  இந்த செய்தி மாவட்டம் முழுவதும் பரவியதில் அதிமுகவினர் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் காந்தி சிலை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர், திமுகவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Tags:    

Similar News