விழுப்புரம் மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2022-01-29 15:42 GMT

வாகன சோதனையை நேரில் பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான த.மோகன்.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட ஜானகிபுரம் நான்குமுனை சாலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த வாகன சோதனையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான த.மோகன்  இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News