ரோட்டோரம் மருத்துவ கழிவுகளை கொட்டிய நிறுவனத்திற்கு நகராட்சி அபராதம் விதித்தது
விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி ரோட்டோரம் மருத்துவ கழிவுகளை கொட்டிய மருந்து ஏஜென்சிக்கு நகராட்சி அபராதம் விதித்தது.
விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி ரோட்டோரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டு தனமாக சிலர் கழிவுகளை இரவு நேரங்களில் கொட்டி விட்டு சென்று விடுவதால், அந்த கழிவுகளை நாய்,பன்றி, கோழி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் கிளறி வருகின்றன, மேலும் அந்த கழிவுகள் தூர்நாற்றம் வீசி, நோய் பரப்பி வருகின்றன,
இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் நகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் தற்போது நேரடி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர், இன்று நகராட்சிக்கு உட்பட வழுதரெட்டி அருகே எல்லிசத்திரம் சாலையில் நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர், அப்போது அங்கு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்க பட்டு, விசாரணையில் அது விழுப்புரம் சரஸ்வதி மருந்து ஏஜென்சி கொட்டியது தெரிந்தது
இதனையடுத்து நகராட்சி ஆணையர் அந்த மருந்து ஏஜென்சிக்கு ரூ.25,000 ஆயிரம் அபராதம் விதித்து இனி கழிவுகளை அனுமதி இன்றி ரோட்டோரம் கொட்ட கூடாது என எச்சரித்தார்.