விழுப்புரம் நகராட்சியில் வேட்பாளர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு
விழுப்புரம் நகராட்சியில் போட்டியிடும் சிபிஎம் கட்சியின் வேட்பாளர் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
விழுப்புரம் நகராட்சியில் 41 வது வார்டில் போட்டியிடும் சிபிஎம் கட்சியின் வேட்பாளர் து.ராமமூர்த்தி பெரியார் நகரில் வாக்காளர்களிடம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,
அப்போது சிபிஎம் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் உடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதே போன்று விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகளிலும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம் நகராட்சி பகுதிகள் இன்று பரபரப்பாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.