செஞ்சியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.. ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தல்...
Farmers Protest Latest News -தமிழக ஆளுனரை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் செஞ்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Farmers Protest Latest News -தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரையின் இடம்பெற்றிருந்த கருத்துகளை தமிழக ஆளுநர் தவிர்த்து பேசியதால், அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு நிலவியது. ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தமிழக ஆளுநரை கண்டித்தும், அவரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செஞ்சி இந்தியன் வங்கி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட குழு தலைவர் மாதவன் தலைமை தாங்கினார், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குண்டு ரெட்டியார் , விவசாயிகள் சங்க வட்ட பொருளாளர் சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் சிவன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேல்மாறன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், செஞ்சி சிவா, சையத் உஸ்மான், கோபண்ணா உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழ்நாடு சட்ட மன்றம் நிறைவேற்றிய அனைத்து சட்டங்களுக்கும் ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு தமிழ்நாட்டு மக்களை ஆளுநர் அவமானப்படுத்துகிறார் என்றும், ஆளுநர் உரையின்போது முக்கியத் தலைவர்கள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசாமல் தவிர்த்த ஆளுநரை கண்டித்தும், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஆளுநர் பாதியில் வெளியேறியதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2