விழுப்புரம் புதுச்சேரி சாலையில் சுங்க சாவடி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

கங்ராம் பாளையம் என்ற இடத்தில் சுங்க சாவடி அமைக்கக் கூடாது என விவசாய சங்கத்தினர் ஆட்சியர் மோகனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.;

Update: 2022-08-30 14:34 GMT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் கெங்கராம்பாளையம் பகுதியில் சுங்கச் சாவடி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினா் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக அனைத்து விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் முருகையன், மாவட்ட தலைவா் கலியமூா்த்தி ஆகியோா் தலைமையில் விவசாயிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர், அந்த மனுவில் விழுப்புரம் - நாகப்பட்டினம் சாலைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதில், ஏற்கெனவே பயன்பாட்டில் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் கெங்கராம்பாளையம் பகுதியில் சுங்கச் சாவடி அமைக்கப்பட உள்ளது. புதிதாக அமைக்கப்படாத சாலைப் பகுதியில் சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது. வேண்டுமெனில் புறவழிச் சாலையில் சுங்கச் சாவடியை அமைத்துக்கொள்ளலாம்.

பழைய சாலையில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டால் விவசாயிகளும், சாதாரண மக்களும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். குறைந்த தொலைவு பயணிக்கும் வாகன ஓட்டிகளும்கூட சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியதாகும். எனவே, கெங்கராம்பாளையம் பகுதியில் சுங்கச் சாவடி அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இல்லையெனில் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.

Tags:    

Similar News