விழுப்புரத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-02-01 00:15 GMT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு,  அனைத்து விவசாயிகள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் சங்கம் கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசின் வேளாண் விளைபொருட்கள் அனைத்திற்கும் சட்டரீதியான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் கே.பி. பெருமாள் தலைமையில் நடந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்.கலியமூர்த்தி, த.வி.ச. மாவட்ட செயலாளர் ஆர்.டி. முருகன், வி.தொ.ச. மாவட்ட தலைவர் வி. அர்ச்சுணன், மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.முத்துகுமரன், மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி, மக்கள் அதிகாரம் மோகன்ராஜ்.உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News