விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் த.மோகன் தலைமையில் இன்று (29.10.2021) நடைபெற்றது.
கூட்டத்தில் திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித்,வேளாண் இணை இயக்குநர் ரமணன். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி திண்டிவனம் வேளாண் அறிவியல் மையம் பேராசிரியர் மற்றும் தலைவர் ஸ்ரீநர், விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.