விழுப்புரம் மாவட்ட விவசாய கூட்டம் 26 ந்தேதி நடக்கிறது
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் இந்த மாதம் சனிக்கிழமை 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது;
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண் குறைகேட்பு கூட்டம் வருகின்ற சனிக்கிழமை 27-ந்தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமைைகளில் வேளாண் விவசாயிகள் குறைகேட்பு நாாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் இந்த மாதத்துக்குரிய வேளாண் குறைகேட்புக்கூட்டம், நிா்வாகக் காரணத்தால் வரும் நவ.26- ந்தேதிக்கு பதிலாக, நவ.27- ந்தேதி காலை 11 மணி அளவில் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்கலாம் என தெரிவித்துள்ளாா்