விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் காத்திருக்கும் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மழை நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் காத்திருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-01-05 08:42 GMT

விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் தொடர் காத்திருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதியை உடனடியாக மத்திய  அரசு வழங்க வேண்டும், மழையால் முற்றிலும் சேதமான போன நெல் பயிர் ஏக்கருக்கு ரூ.30,000/- வழங்க வேண்டும், மற்ற பயிர்களுக்கு உற்பத்திச் செலவை ஈடுகட்டும் வகையில் இழப்பீடு வழங்க வேண்டும், வீடுகளில் தண்ணீர் புகுந்த குடும்பங்களுக்கு ரூ.5,000/- வழங்க வேண்டும், தொடர் மழையால் பாதிக்கப்பட்டு வேலையிழந்த விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10,000/- வழங்க வேண்டும்,

கோமாரி நோயால் இறந்துபோன கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், போர்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும், மழை நிவாரணத்துக்கு தமிழக அரசு கோரியுள்ள நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும், முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கு, உடனடியாக தொகுப்பு வீடு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும், 2020-21 காப்பீடு கட்டி இழப்பீடு கிடைக்காமல் விடுபட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் தவிச.பி.சிவராமன், விதொச வி.அர்ச்சுனன் ஆகியோர் தலைமை தாங்கினர், ஆர்பாட்டத்தில் பல்வேறு விவசாய சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News