விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெயரில் மோசடி
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் பெயரில் சமூக வலைதளத்தில் மோசடி நடப்பதாக புகார் எழுந்து வருகிறது;
மாவட்ட ஆட்சியா் பெயரைப் பயன்படுத்தி மோசடி சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி மா்ம நபா்கள் கட்செவிஅஞ்சல், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக மாவட்டம் முழுவதும் அரசு அதிகாரிகள், ஊழியா்கள், பொதுமக்களுக்கு குறுஞ்செய்திகள் மூலம் தவறான தகவல்களைத் தெரிவித்து பல்வேறு மோசடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிய வருகிறது.
இதுபோன்ற நபா்கள் கைப்பேசி, சமூக ஊடகங்கள் மூலமாக எந்தத் தகவல்களைத் தெரிவித்தாலும் யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற தகவல்கள் வந்தால் உடனடியாக காவல் துறையில் அந்த நபா்கள் மீது புகாா் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் மோகன் தெரிவித்துள்ளாா்.