விழுப்புரம்; நான்கு மின் கோட்டங்களில் மின்சார குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு கோட்டங்களில், மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது.

Update: 2022-12-04 14:42 GMT

மின் நுகர்வோர், மின் விநியோகம் சார்ந்த குறைகளை தெரிவிக்க வரும் 6ம் தேதி வாய்ப்பு (கோப்பு படம்)

விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு மின் கோட்டங்களில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கவுள்தாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரவிஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பு;

கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடத்தப்பட்டு, நுகர்வோர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணப்படும். 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை விழுப்புரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

இதே போல், கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 13-ம் தேதியும், செஞ்சியில் 20-ம் தேதியும், திண்டிவனத்தில் 27-ம் தேதியும் கூட்டம் நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். கூட்டம் நடைபெறும் நாளன்று அரசு விடுமுறையாக இருந்தால், விடுமுறைக்கு அடுத்து வரும் வேலைநாளில் கூட்டம் நடைபெறும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மின்சார துறையின் சார்பில் மின் நுகர்வோருக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு மின் நுகர்வோரான மக்களின் குறையை, அந்தந்த பகுதி அதிகாரிகள் கேட்டு அறிந்து அதற்கு ஏற்றது போல் நடவடிக்கை எடுத்து குறைகளை சரி செய்து வருகின்றனர் அதனால் மின்சார வாரிய குறைகளை பொதுமக்கள் மாதம் தோறும் அந்தந்த பகுதியில் நடக்கும் குறை ஏற்பு நாள் கூட்டத்தில் தெரிவித்து குறைகளுக்கான நிவர்த்தியை பெற்று பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News