விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-08-17 14:50 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின் ஊழியர்கள்.

விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை முத்தரப்பு ஒப்பந்த படி அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும். அது வரை தினக்கூலியாக ரூ.380 ம், மின்வாரிய விரிவாக்க பணிகளையும், ஏற்கனவே கே 2 ஒப்பந்தத்தில் பணி செய்ததற்கு உரிய பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் கே.அம்பிகாபதி தலைமை தாங்கினார், துணைத்தலைவர் எம்.புருசோத்தமன், திட்ட செயலாளர் சேகர், திட்ட பொருளாளர் அருள், ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

ஆர்பாட்டத்தில் வெங்கட் கிருஷ்ணன், ஏழுமலை, குணசேகர், சிவசங்கரன், பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வீரமுத்து நன்றி கூறினார்.

Tags:    

Similar News