அமைச்சர் சி.வி .சண்முகத்திற்கு மாற்று வேட்பாளர் மனைவி
விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சி.வி.சண்முகதிற்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
தமிழக தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளது. அதையொட்டி அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அவரது மனைவி மாற்று வேட்பாராக வேட்புமனு தாக்கல் செய்தார்.
விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் சிவி.சண்முகம் போட்டியிடுகிறார். அவருக்கு மாற்று வேட்பாளராக அமைச்சர் சண்முகத்தின் மனைவி கௌரி வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி அரிதாசிடம் தாக்கல் செய்தார். அப்போது ஒன்றிய செயலாளர் ஜி.ஜி.சுரேஷ்பாபு உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனா்.