வாக்காளர்களுக்கு பணம் : 3பேர் பிடிபட்டனர்

விழுப்புரம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவில் ஈடுபட்ட மூவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்;

Update: 2021-04-05 11:23 GMT

ஃபைல் படம் 

விழுப்புரம் தொகுதியில் வண்டிமேடு, மருதுார் மற்றும் மந்தக்கரையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக, மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.

அதன்பேரில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், டி.எஸ்.பி., நல்லசிவம் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மருதுாரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த சிலர், அதிகாரிகளை கண்டதும் தப்பியோடிவிட்டனர்.தொடர்ந்து மந்தக்கரையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த 2பேரை  8,500 ரூபாயுடன் பிடித்து டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

இதேபோன்று, வண்டிமேட்டில் பணம் கொடுத்த வாலிபரை 5,000 ரூபாயுடன் பிடித்து விழுப்புரம் மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.பிடிபட்ட 3பேரிடமும்  எந்த கட்சிக்கு ஆதரவாக பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News