விழுப்புரத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
தேர்தலை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன் தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம், இன்று (17.02.2022) நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல் பார்வையாளர் எம்.லக்ஷ்மி முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான த.மோகன் தலைமையில் நடந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பூ.காஞ்சனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பூ.ராமகிருஷ்ணன் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.