விழுப்புரத்தில் நடைபெற்ற சிஐடியு மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு
விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற சிஐடியு தொழிற்சங்க மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்
விழுப்புரத்தில் நடைபெற்ற 10-வது மாவட்ட சிஐடியு மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
விழுப்புரம்-திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் உள்ள எம்.கே.மஹாலில் சிஐடியு மாவட்ட 10- வந்து மாநாடு விழுப்புரத்தில் அய்யப்பன் நினைவரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமை தாங்கினார், மாநாட்டில் மாவட்ட துணைத்தலைவர் எம்.புருசோத்மன் செங்கொடியை ஏற்றி வைத்தார். அனைவரும் அதற்கு கோஷங்களை எழுப்பியவாறு மரியாதை செலுத்தினர், மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.மலர்விழி அனைவரையும் வரவேற்று பேசினார், மாவட்ட துணைச்செயலாளர் பி.அருள்ஜோதி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில செயலாளர் சி.ஜெயபால் மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து, தொடக்க உரையாற்றினார்.
வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி முன் வைத்து பேசினார், மாவட்ட பொருளாளர் வி.பாலகிருஷ்ணன் வரவு செலவு கணக்கை சமர்பித்தார். மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்தி பேசினர், மாநாட்டில் நிர்வாகிகள் பி.குமார், கே.அம்பிகாபதி, ஏ.சகாதேவன்,எச்.ரகோத்மன், ஆர்.சேகர், ஆர்.அருள் ஆகியோர் மாநாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, குறைக்க வேண்டும், மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும்,மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார மசோதா 2022யை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினர்.
புதிய நிர்வாகிகள்: மாநாட்டில் விழுப்புரம் மாவட்ட புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவராக எஸ்.முத்துக்குமரன், மாவட்ட செயலாளராக ஆர்.மூர்த்தி, மாவட்ட பொருளாளராக வி.பாலகிருஷ்ணன் உட்பட 6 மாவட்ட துணைத்தலைவர்கள், 6 மாவட்ட துணைச்செயலாளர்கள், 21 பேர் மாவட்ட குழு என 36 பேர் விழுப்புரம் மாவட்ட சிஐடியுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் மாநில செயலாளர் பி.கருப்பையன் கலந்து கொண்டு மாநாட்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தினார். முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.கணபதி நன்றி கூறினார்.