விழுப்புரம் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் வழங்கிய குடிநீர் இயந்திரம்
விழுப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினர்.;
விழுப்புரம் அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினர்.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினர், விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் யமுனாபாய் தலைமை தாங்கினார். பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பெரியசாமி வரவேற்றார். வேணுகோபால் உள்ளிட்ட முன்னாள் மாணவர்களால் பள்ளிக்கு ரூ.1.65 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் வழங்கப்பட்டது. விழாவில் காமராஜர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டதோடு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவின்போது கணித மன்றம் மற்றும் அறிவியல் மன்றத்தை உதவி தலைமை ஆசிரியர் கவிதா தொடங்கி வைத்தார். விழா முடிவில் ஆசிரியர் மணிவண்ணன் நன்றி கூறினார்.