நாடக கலைஞர்கள் வங்கி கடன் கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட நாடக கலைஞர்கள் வங்கி கடன் கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கொரோனா காரணமாக வாழ்வாதரம் இழந்து பாதிக்கப்பட்ட நாடகக் கலைஞர்களுக்கு தொழில் தொடங்க வங்கி கடன் நிதி உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியை சேர்ந்த ராஜா தேசிங்கு நாடக மற்றும் கலை குழுவினர் ஆறுமுகம் தலைமையில் திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து, மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர், அதில் திருவிழாக்காலங்களில் 6 மாதம் மட்டுமே நாடகம் நடத்தி குடும்பம் நடத்தி வந்ததாகவும், நாடகத் தொழிலை நம்பியே வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
தற்போது கொரோனா தொற்றின் காரணமாக 2 ஆண்டுகளாக தமிழக அரசின் தடையால் நாடகம் நடத்த முடியாமல் வருமானம் ஏதும் இன்றி சிலர் கொரானோ நோய்தொற்றின் காரணமாகவும், சில கலைஞர்கள் வருமானம் ஏதும் இன்றி வறுமை என்னும் கோரப்பிடியால் சிக்கி சீரழிந்த குடும்பங்கள் பல தற்போது நிலவும் சூழ்நிலையால் எப்படி உயிர் வாழ்வது செய்யபோகிறோம் என் வழி தெரியாத முடங்கி கிடப்பதாக தெரிவித்த அவர்கள், நாடகக் கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் செழிக்க சொந்தமாக தொழில் தொடங்க ஒவ்வொரு கலைஞர்களுக்கும் வங்கி மூலம் கடன் உதவி அளித்து உதவி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மன்றத்தில் உள்ள 21 கலைஞர்களுக்கும், வங்கி கடன் உதவி தந்து ஏழைக் கலைஞர்களின் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவித்து உள்ளனர்.