விழுப்புரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

விழுப்புரத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் வெளியிட்டார்.;

Update: 2021-11-01 14:18 GMT

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி 2022 சுருக்க, திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சினர் முன்னிலையில் வெளிட்டார்

அதனை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் பெற்று கொண்டார்.மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 16 லட்சத்து, 94 ஆயிரத்து,183 வாக்காளர் உள்ளனர்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ், நகர தலைவர் செல்வராஜ், திமுக நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News