விழுப்புரம் அருகே இரட்டை கொலை: கொலையாளி 24 மணிநேரத்தில் கைது

வானூர் அருகே கண்டமங்கலம் ஒன்றியம், கலித்திராம்பட்டில் இரு பெண்களை கொலை செய்தவரை 24 மணி நேரத்தில் பிடித்த காவல்துறை;

Update: 2021-12-08 07:45 GMT

இரட்டை கொலை புரிந்த கொலையாளி

 கண்டமங்கலம் ஒன்றியம், கலித்திரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி சரோஜா (வயது80). இவர்களது மகள் பூங்காவனம் (60). ஆகியோர் அக்கிராமத்தில் வசித்து வந்தனர்,

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அவர்கள் இருவரும் தாக்கப்பட்டு, படுகொலை செய்து யாரோ நகைகளை பறித்து சென்றிருந்தனர், இது குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர், மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்,

தொடர்ந்து கொலையாளியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கபட்டனர், தீவிர விசாரணையில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தலை சேர்ந்த கவிதாஸ் (30) என்பவனை போலீசார் கைது செய்தனர், 24 மணி நேரத்தில் கொலையாளியை கைது செய்த விழுப்புரம் போலீசுக்கு மக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது,

Tags:    

Similar News