விழுப்புரம் தொகுதியில் திமுக வேட்பாளர் லட்சுமணன் தீவிர வோட்டு வேட்டை
விழுப்புரம் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் லட்சுமணன் தீவிர வாக்கு சேரிப்பில் ஈடுபட்டு ஓட்டு வேட்டையாடினார்.;
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் திமுக வேட்பாளர் டாக்டர்.இலட்சுமணன் புதன்கிழமை தொகுதியில் குமளம்,வி.புதூர்,கெங்கராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு முதற்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அப்போது முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், மாவட்ட பொருளாளர் இரா.ஜனகராஜ் ன, உட்பட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.