விழுப்புரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Update: 2022-07-07 09:19 GMT

விழுப்புரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஆகஸ்ட் 15-ல் தலித் ஊராட்சிமன்ற தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதற்கான கூட்டம் விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது, கூட்டத்திற்கு மாநில தலைவர் த.செல்லக்கண்ணு தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கே.சாமிவேல்ராஜ், மாநில பொருளாளர் கி.மோகனா, மாநில துணைத்தலைவர் ஜி.ன்னந்தன், மாநில துணை பொதுச்செயலாளர் வி.செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி எப்படி வருங்காலத்தில் செயல்படவேண்டும் என சிறப்புரையாற்றினர். முன்னதாக இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து ஒரு நிமிடம் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.


கூட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15- ந்தேதி நாட்டின் சுதந்திரம் தினம், அன்று சுதந்திர தினத்தில் அனைவரும் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு அடுத்த மாதம் வரும் ஆகஸ்ட் 15 - ல் சுதந்திர தினத்தில் தேசிய கொடியை தமிழகத்தில் உள்ளாட்சியில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வரும் தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் விழுப்புரம் தலைவர் எஸ்.முத்துகுமரன், செயலாளர் ஏ.சங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News