கொரானா நோயாளிகளை அலைகழிக்கும் மாவட்ட சுகாதாரத்துறை

விழுப்புரம் மாவட்டத்தில்.

Update: 2021-05-12 02:29 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரானா தனிமைப்படுத்தும் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் விழுப்புரம் நகரத்தில் சாலாமேடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்லூரியில் உள்ள  கொரோனா தொற்று சிகிச்சை மையத்தில் கொரானா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த  6 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்ல டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்,

பொது முடக்கம் காரணமாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ள நிலையில் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலையில்  கல்லூரி வாசலிலேயே வாகனம் வராததால் காத்துக்கொண்டிருந்தனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும், விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தும்  யாரும் கண்டு கொள்ளாமல் இருந்து உள்ளனர்,

இனி வரும் காலங்களில் எங்களை காத்திருக்க வைத்தது போல் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் கொரானா தொற்று குணமாகி வீட்டுக்கு செல்பவர்களுக்கு உடனடியாக அதிகாரிகள் தனியாக வாகனம் ஏற்பாடு செய்து வீட்டுக்கு அழைத்து சென்று விட்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்து சென்றனர்,

மேலும் கொரானா தொற்று பாதித்து மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள அவர்களை மேலும் இது மாதிரி சம்பவங்களால் பாதிக்கப்படாமல் மாவட்ட நிர்வாகம் அனைத்து கொரானா சிகிச்சை மையங்களையும் கண்காணிக்க வேண்டும்,

உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக முறையாக உள்ளதா என அடிக்கடி நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News