விழுப்புரத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட மாநாடு

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் எம். கே. மஹாலில் இந்திய மாணவர் சங்கத்தினர் மாநாடு நடத்தினர்.;

Update: 2022-07-31 03:12 GMT

இந்திய மாணவர் சங்கத்தின் 16-வது விழுப்புரம் மாவட்ட மாநாடு நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கத்தின் 16-வது, விழுப்புரம் மாவட்ட மாநாடு எம்.கே.மஹாலில்  மாவட்ட தலைவர் எம்.ஹரிஷ் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் சங்க கொடியை மாவட்ட துணை செயலாளர் எஸ்.சுமித்ரா ஏற்றி வைத்தார். மாநில துணைச்செயலாளர் எம்.தமிழ்பாரதி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து, தொடக்க உரையாற்றினார்.மாநாட்டில் இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சே.அறிவழகன், மாநில துணைச்செயலாளர் எஸ்.குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்தி பேசினர்.


புதிய கல்வி கொள்கையை திணித்து மாணவர்களின் உயர் கல்வியை சீரழிக்க வேண்டும், நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும், மத்திய பல்கலைக்கழக கியூட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும், பள்ளி கல்லூரிகளில் உள்ள ஆசிரியர், பணியாளர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். மாநாட்டில் மாவட்ட தலைவராக டி.சஞ்சய், மாவட்ட செயலாளராக ஏ‌.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உட்பட 19 பேர் மாவட்ட குழுவினர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர், மாநாட்டில் மாவட்ட குழு யு.உமாபதி உட்பட சுமார் 70 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News