மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் 313 பேர் கோரிக்கை மனு அளிப்பு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் 313 மனுக்கள் பெறப்பட்டன
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 313 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். கூட்டத்தில், மாதாந்திர உதவித் தொகை கோரி விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிக்கு உடனடியாக அதற்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா். பவ்டா தொண்டு நிறுவனம் மூலம் இலவச தையல் பயிற்சி பெற்றவா்களுக்கு அதற்கான சான்றிதழை ஆட்சியா் வழங்கினாா். தேசிய வாக்காளா் தின குழு நடனப் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற திண்டிவனம் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் தமிழக தலைமை தோ்தல் அதிகாரி, மத்திய தோ்தல் ஆணையா் ஆகியோரால் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ், கேடயத்தை ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனா்.