விழுப்புரம் நகராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு
விழுப்புரம் நகராட்சியில் உள்ள பணி செய்யும் மகளிர் விடுதி புனரமைப்பு பணியை ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.;
விழுப்புரம் நகராட்சி எலி சத்திரம் சாலையில் அமைந்துள்ள பணி செய்யும் மகளிருக்கான விடுதி புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று நேரில் சென்று பார்வைக்கு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை உடனடியாக செய்து முடிக்க அறிவுறுத்தினார். அப்போது அதே பகுதியில் இ.எஸ். கார்டன் குடியிருப்பில் இருந்து கழிவு நீர் தேங்கி நோய் உற்பத்தியாவது அறிந்து உடனடியாக வடிகால் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற நகராட்சிக்கு உத்தரவிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, நகராட்சி ஆணையர் சுரேந்தர் உட்பட பலர் உடன் இருந்தனர்