விழுப்புரத்தில் மின் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மின் வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2022-06-07 16:45 GMT

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் விழுப்புரம் மாவட்ட மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு சம்மேளன மாநில துணைத்தலைவர் எம்.குப்புசாமி தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர்கள் சிஐடியு ஆர்.சிவராஜ், பொறியாளர் ஐக்கிய சங்க ஆர்.பெரியசாமி, மின்சார அண்ணா தொழிற்சங்க எஸ்.பன்னீர்செல்வம், பொறியாளர் சங்க சந்திரசேகரன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இதில், மின் வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள் பெற்று வந்த 23 சலுகைகளை பறித்த வாரிய ஆணை எண்.2யை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவை தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் கே.அம்பிகாபதி, ஆர்.சேகர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News