முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அரசியலில் கரும்புள்ளி: விழுப்புரம் எம்எல்ஏ
அரசியலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் ஒரு கரும்புள்ளி என விழுப்புரம் எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் தெரிவித்தார்;
விழுப்புரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 15 முதல் 18 வயது வரை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரும், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளருமான டாக்டர் இரா இலட்சுமணன், மாவட்ட கலெக்டர் த.மோகன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
முகாம் நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர்.பொற்கொடி, நகராட்சி ஆணையர், வட்டாட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக முதல்வர் பற்றியும், அரசு அதிகாரிகளின் சட்டையை கழட்டுவேன் என்று சி.வி.சண்முகம் பேசி இருந்தார். ஏற்கனவே சிவி.சண்முகத்தின் டவுசரை கழட்டியவர்கள் விழுப்புரம் தொகுதி மக்கள், அரசியலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் ஒரு கரும்புள்ளி என தெரிவித்தார்