சி.வி.சண்முகம் கைது: ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சாலை மறியல் செய்த அதிமுகவினர்

அதிமுகவினர் சாலை மறியல் செய்தபோது, ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் தவித்தது.;

Update: 2021-08-31 08:23 GMT

விழுப்புரத்தில் தர்ணாவில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகத்தை விடுதலை செய்ய வேண்டும். என்று கூறி அதிமுக கோலியனூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ் பாபு தலைமையில், விழுப்புரம் புதுச்சேரி சாலை காந்தி சிலை அருகே சாலை மறியல் செய்தனர்.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியல் செய்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதன் காரணமாக ஒரு மணிநேரம் விழுப்புரம், புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அப்போது அந்த வழியாக புதுச்சேரி மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் சிக்கியது, செல்ல முடியாமல் தவித்தது. இதனைக் கண்ட போது மக்கள் வேதனைப் பட்டனர். போலீசார் வந்து வழி ஏற்பாடு செய்ததை யடுத்து ஆம்புலன்ஸ் சென்றது. இந்த சம்பவம் அனைவரையும் கவலையடையச் செய்தது.

Tags:    

Similar News