விழுப்புரத்தில் சுகாதாரத்துறைக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய தனியார் நிறுவனம்
விழுப்புரத்தில் கிரெடிட் ஆக்சஸ் கிராமீன் லிமிடெட் நிறுவனம் சார்பில் சுகாதாரத்துறைக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பில் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது
விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தேவையான ரூ.45 ஆயிரம் மதிப்பிலான மாஸ்க் உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு உபகரணங்களை கிரெடிட் ஆக்சஸ் கிராமீன் லிமிடெட் நிறுவனம் சார்பில் கிளை மேலாளர் பி.பெருமாள் தலைமையில் அமைச்சர் பொன்முடியிடம் வழங்கினர்,
அப்போது துணை இயக்குநர் டாக்டர்.செந்தில்குமார், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், வட்டார மேலாளர் டி.சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.