விழுப்புரத்தில் சி.பி.எம். கட்சியினர் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

விழுப்புரம் மாவட்ட சி.பி.எம். கட்சி அலுவலகத்தில் இன்று தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

Update: 2022-08-15 15:51 GMT
விழுப்புரம் மாவட்ட சி.பி.எம். அலுவலகத்தில் சுதந்திர தினத்தையொட்டி இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட சி.பி.எம். அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார் தலைமையில் நடைபெற்ற நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சியில் மூத்த உறுப்பினர் எம்.புருசோத்மன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார், செங்கொடியை கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் ஏற்றி வைத்தார், தொடர்ந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் உறுதி மொழி வாசித்தார், அதனை சி.பி.எம். கட்சி நிர்வாகிகள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கீதா, விழுப்புரம் வட்ட செயலாளர் ஆர்.கண்ணப்பன், சி.ஐ.டி.யு .மாவட்ட பொருளாளர் வி.பாலகிருஷ்ணன், பிளம்பர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முருகன்,டி.ஒய்.எப்.ஐ. மாவட்ட தலைவர் எஸ்.பிரகாஷ், விழுப்புரம் நகர செயலாளர் என்.மேகநாதன்,என்.எல்.சி ஓய்வுபெற்றோர் அமைப்பு சுந்தர்,டி.என்.எஸ்.டி.சி .ஓய்வு பெற்றோர் அமைப்பு ராமமூர்த்தி,பாலு, பி.எஸ்.என்.எல். முத்துவேல், நாகராஜன் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.முன்னதாக மாவட்ட குழு உறுப்பினர் கே.வீரமணி அனைவரையும் வரவேற்று பேசினார்,

Tags:    

Similar News