விழுப்புரத்தில் சிபிஎம் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
விழுப்புரத்தில் உள்ள நகராட்சி பகுதியில் சிபிஎம் வேட்பாளர் ராமமூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
41-வது வார்டில் திமுக மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் து.ராமமூர்த்தி வாக்கு சேகரித்தார்.
விழுப்புரம் நகராட்சி 41-வது வார்டில் திமுக மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் து.ராமமூர்த்தி போட்டியிடுகிறார். இவர், அப்பகுதியில் உள்ள தாமிரபரணி சதுக்கத்தில் வசிக்கும் வாக்காளர்களிடம், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன், மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட உடனிருந்தனர்.