விழுப்புரத்தில் சிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேசிய குழு உறுப்பினர் மீதான தாக்குதலை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2022-09-05 15:21 GMT

சென்னை விசார்பாடி பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் மூ.வீரபாண்டியன் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆ.இன்ப ஒலி, ஆர்.கலியமூர்த்தி, எம்.ராஜேந்திரன், பி.சேகர், மோகன், ஜெயசந்திரன்,ராமசந்திரன், வழக்கறிஞர் முருகன், திலகவதி, திண்டிவனம் வட்ட செயலாளர் மாரியம்மாள், விழுப்புரம் நிதானம் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News