கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கம்யூனிஸ்ட் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட சித்ரா என்பவரின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது;

Update: 2021-11-23 09:47 GMT

விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர்சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  அரகண்டநல்லூர் அருகே  வீரபாண்டி கிராமத்தில் வசித்து வந்த பழனி மனைவி சித்ரா (வயது-43) என்பவர், அடுக்கம் எல்லையிலுள்ள அவருக்கு சொந்தமான நிலத்தில் பால் கறந்து வர கடந்த 04.10.2021 மாலை 3 மணியளவில் சென்றவர், இரவு 8 மணிவரை வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் பல இடங்களிலும் தேடினார்கள்.

இந்நிலையில் மூக்குத்திக் குண்டு கல்லாங்குத்து பாறைக்கு அருகில் உள்ள பள்ளத்தில் அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் விழுந்து கிடந்தது. அதன் அருகில்  சித்ரா கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்தார். இறந்துகிடந்த அவரது உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயங்கள் இருந்தது. மேலும் அவர் அணிந்திருந்த நகைகள், ஏடிஎம் கார்டு மற்றும் பணம் வைத்திருந்த ஹேண்ட் பேக் திருடப்பட்டுள்ளது. 

முன்விரோதம் காரணமாக கொலை நடத்திருக்கலாம் என இறந்த சித்ராவின் மகள் தமிழரசி அரகண்டநல்லூர் காவல்நிலையத்தில் புகார்கொடுத்ததையொட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சித்ராவின் உடல் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சித்ரா படுகொலை செய்யப்பட்டு 50 நாட்களை கடந்த பின்னரும் குற்றவாளிகளை போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே, கொலை வழக்கை மாநில குற்ற புலனாய்வு துறைக்கு (CBCID) மாற்றி உத்தரவிட்டு குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து தக்க நடவடிக்கை வலியுறுத்தி, வரும் 28.11.2021 திங்கட்கிழமை அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அனைத்து கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் அரகண்டநல்லூர் கடைவீதியில் நடைபெறும் என தெரிவித்தார்.

அப்போது சிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆர்.கலியமூர்த்தி, ராஜேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News