விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் மாட்டு வண்டியில் சென்று ஓட்டு சேகரித்தார்.
2021 சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேட்பாளர்கள், ஹோட்டலில் டீ போடுவது,சிலம்பம் சுற்றுதல், வயலில் இறங்கி வேலை செய்தல் உள்ளிட்ட வித்தியாசமான நடவடிக்கைகள் மூலம் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் இலட்சுமணன் இன்று கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனாங்கூர், பானாம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் மாட்டுவண்டியில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக கிளைச் செயலாளர் சுந்தர் உட்பட பலர் உடனிருந்தனா்.