விழுப்புரத்தில் சமூக ஆர்வலர் பாபு செல்லதுரைக்கு விருது
விழுப்புரத்தில் சமூக விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் பாபு செல்லதுரைக்கு எம்எல்ஏ விருது வழங்கினார்.
முட்டத்தூர், ஒய்க்காப் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிபவர் முனைவர் ம. பாபு செல்வதுரை. இவர் ஜெஆர்சி மாவட்ட கன்வீனராகவும் உள்ளார். கொரோனா அவசரகாலப் பணிகளில் அவர் தன்னார்வ தொண்டராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள், முக கவசங்கள், கபசுர குடிநீர் வழங்கியது, முன் களப்பணியாளர்களுக்கு முகக்கவசம், கொரோனா ஊரடங்கு காலத்தில் தன் சொந்த செலவில் நிவாரண உதவி போன்றவற்றை மேற்கொண்டார்
மேலும், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் நடத்தியது. ஜே.ஆர்.சி கலைக்குழுவினர் மூலம் கிராமப்பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார், மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறைப்பணியில் கொரோனா சிகிச்சையிலுள்ளவர்களுக்கு மன ஆற்றுதல் பணி மேற்கொண்டதோடு, துப்புரவு தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உதவியது. கொரோனா தடுப்பூசி முகாம்கள், வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டது. போன்றவை விழுப்புரம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
அதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா கால சிறந்த சேவையாளராக கருதி சமுக நல அமைப்புகளின் கூட்டமைப்பு, ஆசிரியர் சங்கங்கள், இந்தியன் ரெட் கிராஸ், ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் நிர்வாகிகள் சார்பில் அவருக்கு கொரோனா வாரியர் விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு கொரோனா வாரியர் விருதை எம்எல்ஏ லட்சுமணன் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைப்புகளின் நிர்வாகிகள் கோபிநாத், செல்வராஜ், ஆனந்த்,லட்சுமிநாராயணன், பாண்டியன் டிசம்பர் 3 இயக்க மாநிலப் பொதுச்செயலர் அண்ணாமலை, மற்றும் ஜே.ஆர்.சி நிர்வாகிகள் இரவிந்திரன், எல்.அல்போன்ஸ், அந்தோணி கிருஸ்துராஜா, தன்னார்வலர் பொற்செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.