விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 83 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், இன்று 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 46,599 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று யாரும் இறக்கவில்லை. மாவட்டத்தில் இதுவரை, 358 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், இன்று மட்டும் 16 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 45,810 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 431 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.