விழுப்புரம் மாவட்டத்தில் வேகமாக குறைகிறது கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று 13 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2022-02-14 14:30 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 54,431 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் நேற்று ஒருவரும், இன்று  சிகிச்சை பலனின்றி ஒருவரும் இறந்தனர்.

மாவட்டத்தில் இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.  இன்று திங்கட்கிழமை மட்டும்,  105 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 53,723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 342 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News